நிலக்கரி பற்றாக்குறையால் பாதிப்பு இல்லை.. அமைச்சர் செந்தில் பாலாஜி..

48
Spread the love

சென்னை கலைவாணர் அரங்கத்தில் மின்னகம் வழியாக பொதுமக்கள் கொடுத்த புகாரின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு பின்னர் அவர் அளித்த பேட்டி …நிலக்கரியை பொறுத்தவரை 5 நாட்களுக்கு கையிருப்பு உள்ளது. ஒவ்வொரு நாளும் நிலக்கரி வந்து சேர்வதால் சமாளிக்க கூடிய வகையில் உள்ளது. ஆனால் தனியார் மின் உற்பத்தியாளர்களிடம் இருந்து தமிழக அரசு மின்சாரம் பெற்று வருகிறது. அந்த தனியாருக்கு நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் 100 சதவீதம் தந்து கொண்டிருந்தவர்கள் தற்போது 40 சதவீதம் தான் தருகிறார்கள். இதற்கு நிலக்கரி விலை உயர்வும், தட்டுப்பாடும்தான் காரணம். தமிழக அரசின் அனல் மின் நிலைய உற்பத்தியானது 58 விழுக்காடில் இருந்தது. தற்போது தமிழக அரசின் போர்கால நடவடிக்கையால்  4 மாதத்திற்குள் 70 விழுக்காடாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதனால் சமாளிக்க முடிகிறது. பருவகால மழையை எதிர்கொள்ளும் வகையில் ஒரு லட்சம் மின் கம்பங்கள் தயார் நிலையில் உள்ளன. அதே போல 250 கிலோ மீட்டர் நீளத்திற்கு மின் கம்பிகள் உள்ளிட்ட அனைத்து உபகரணங்களும் தயார் நிலையில் உள்ளன. 

LEAVE A REPLY