தமிழகத்தில் ஒரு நொடி கூட மின்வெட்டு இருக்காது – அமைச்சர் செந்தில் பாலாஜி

80
Spread the love

திருச்சி விமான நிலையத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறும்போது….. அனல் மின் நிலையங்களுக்கு ஒரு நாளைக்கு 56 ஆயிரம் டன் நிலக்கரி தேவைப்படுகிறது. தற்போது நாள் ஒன்றுக்கு 60 ஆயிரம் டன் நிலக்கரி வரவழைக்கப்பட்டு கொண்டிருக்கிறது. கடந்த ஆட்சியில் 1800 மெகாவாட் அளவில் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. ஆனால் 4320 மெகா வாட் உற்பத்தி செய்ய முடியும். தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களில் இருந்து கொள்முதல் செய்வதற்காக, பராமரிப்பு என்ற பெயரில் அரசு மின் உற்பத்தி குறைக்கப்பட்டது. அந்த பராமரிப்பு பணிகளை துரிதப்படுத்தி, முடிக்கப்பட்டு தற்போது உற்பத்தி அதிகப்படுத்தப்பட்டு உள்ளது. குறிப்பாக 43 சதவீதம் என்ற அளவு உற்பத்தியை தற்போது 70 சதவீதமாக உயர்த்தப்பட்டு உள்ளது. மத்திய அரசு கட்டுப்பாட்டின் படி தமிழகத்தில் 6 நாட்கள் நிலக்கரி இருப்பு வைத்துக்கொள்ளப்பட வேண்டும். தற்போது 4 நாட்கள் இருப்பு இருந்து கொண்டு இருக்கிறது. தனியார் நிறுவனங்களுக்கான வௌிநாடு நிலக்கரி விலை உயர்ந்துள்ளது. எனவே தனியார் நிறுவனங்கள் 2830 மெகாவாட் தர வேண்டிய

நிலையில் தற்போது 1300 மெகாவாட் மட்டுமே கிடைக்கிறது. இதனால் அரசு மின் உற்பத்தியை அதிகப்படுத்தி சமாளிக்கப்பட்டு வருகிறது. தற்போது சீரான மின் விநியோகம் நடைபெறக்கூடிய அளவிற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. தற்போது 2800 மின் பற்றாக்குறை உள்ளது. அது மாவட்டம் தோறும் சூரிய மின் சக்தி மூலம் உற்பத்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. தமிழகத்தில் ஒரு நொடி கூட மின்தடை இருக்காது. கடந்த ஆறு மாதங்களில் 1 லட்சம் கூடுதல் மின் இணைப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. அதற்கு தகுந்தாற்போல மின் உற்பத்தியையும் அதிகப்படுத்தப்பட வேண்டி உள்ளது. தமிழகத்தில் முதல் முறையாக குறைந்த விலையில் 1500 மெகாவாட் மின் கொள்முதல் செய்யப்பட உள்ளது. ஒரு வருடத்திற்கு மின் வாரியம் 16 ஆயிரம் கோடி வட்டி கட்டுகிறோம். இதனை படிப்படியாக குறைத்து 2 ஆயிரம் கோடி ரூபாய் சேமிக்க வேண்டும் என்று முதல்வர் வழிகாட்டி உள்ளார் என்று அவர் கூறினார். 

LEAVE A REPLY