அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, மனோதங்கராஜை குமரிக்கு செல்ல முதல்வர் உத்தரவு

143
Spread the love

கன்னியாகுமரி மாவட்டத்தில் சில தினங்களாக பெய்து வரும் மழையை தொடர்ந்து, குழித்துறை, முன்சிறை உள்ளிட்ட பகுதிகளில் பல கிராமங்கள் தண்ணீரால் சூழப்பட்டுள்ளது.  திக்குறிச்சி பகுதியில் சுமார் ஆயிரம் ஏக்கர் வாழை,  காய், கனிகள் பயிரிடப்பட்டிருந்த விவசாய நிலங்கள்  தண்ணீர் முழ்கி காணபடுகிறது. இது போன்று அஞ்சாலிகடவு, வைக்கலூர், பரக்காணி பகுதிகளிலும் ரப்பர் தோட்டங்கள், வாழை போன்ற விவசாய நிலங்கள் தண்ணீர் மூழ்கி உள்ளது. மாவட்டத்தில் தண்ணீர் தேங்கி நிற்கும் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டு உள்ளது. கனமழியில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் 10 க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சாய்ந்து 13 டிரான்ஸ்பார்மர்கள் பழுதடைந்த நிலையில் அதை பராமரிக்கும் பணிகளில் மின் வாரிய ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.  இதன் காரணமாக அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, மனோ தங்கராஜ் ஆகியோர் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு செல்ல முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். குமரி மாவட்டத்தில் மழை, வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கவும் முதல்வர் ஆணையிட்டுள்ளார்.

LEAVE A REPLY