25 ஆண்டுகளுக்கு பிறகு திமுக வசமான கரூர்… செந்தில்பாலாஜி சாதனை..

492
Spread the love

 கடந்த 1996ம் ஆண்டு திமுக-தமாகா கூட்டணியில் கரூர் மாவட்டத்தில் உள்ள கரூர், குளித்தலை, கிருஷ்ணராயபுரம், அரவாக்குறிச்சி ஆகிய 4 தொகுதிகளிலும் திமுக போட்டியிட்டு வெற்றி பெற்றது.. அதன்பின்னர் கடந்த 25 ஆண்டுகளில் நடந்து முடிந்த தேர்தல்களில் திமுகவிற்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டாலும் அவற்றில் 4 தொகுதிகளிலும் திமுகவால் பெற்றி பெற முடியவில்லை..  சுமார் 25 ஆண்டுகளுக்கு பிறகு நடந்து முடிந்த 2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் கரூர் மாவட்டத்தில் உள்ள4 தொகுதிகளிலும் திமுக போட்டியிட்டது. அதன் முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் கரூர்-செந்தில்பாலாஜி, குளித்தலை- மாணிக்கம், அரவாக்குறிச்சி-இளங்கோ, கிருஷ்ணாராயபுரம் – சிவகாமசுந்தரி என 4 தொகுதிகளிலும்  திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.. சுமார் 25 ஆண்டுகளுக்கு பிறகு மாவட்ட பொறுப்பாளர் செந்தில்பாலாஜி தலைமையில் கரூர்  திமுக இந்த சாதனையை படைத்துள்ளது..40 நாட்களாக செந்தில்பாலாஜி 4 தொகுதிகளிலும் மேற்கொண்ட கடுமையான உழைப்பு காரணமாகவே இந்த சாதனையை பெற்றதாக அரசியல்பார்வையாளர்கள் கூறுகின்றனர்…

LEAVE A REPLY