ஞாபகம் வருதே .. ஞாபகம் வருதே.. வகுப்பு பெஞ்சில் அமர்ந்திருந்த அமைச்சர் செந்தில்பாலாஜி..

167
Spread the love

 சுமார் 150 வருடங்கள் வயது கொண்ட கரூர் நகர்மன்ற மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் தமிழக அமைச்சர் செந்தில்பாலாஜி கலந்து கொண்டார்.  அது. பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியரும் 98 வயதான கல்வியாளருமான B.S.D சார் என்று எல்லோராலும் விரும்பி வணங்கப்படும் பி.செல்வதுரை விழாவிற்கு வந்து முன்வரிசையில் அமர்ந்திருந்தார். அவருடன் முன்னாள் மாணவர் சங்கத்தின் நிர்வாகிகளான விசா. குணசேகரன், பத்திரிக்கையாளர் கு. சிவராமன் உள்ளிட்டோரும் அமர்ந்திருந்தனர். விழா மேடை ஏற சென்ற அமைச்சர்  செந்தில் பாலாஜி BSD என்று அழைக்கப்படும் ஆசிரியர் செல்வதுரையை பார்த்தவுடன் மேடை ஏறாமல் BSD சாரின் பாதம் தொட்டு வணங்கி ஆசி பெற்றார். விழா முடிந்து எல்லோரும் கிளம்பி கொண்டிந்தார்கள். 
பள்ளி வாசல் அருகே சென்று கொண்டிருந்த போது BSD சார் என்னிடம் ‘மினிஸ்டர் போய் விட்டாரா ?’என்று சிவராமனிடம் கேட்டிருக்கிறார். அப்போது அமைச்சரின் கார் புறப்பட்டுக் கொண்டிருந்தது. உடனடியாக சிவராமன் செல்வதுரை சாரிடம்  ‘ஏன் சார் என்ன விஷயம் ?’ என்று கேட்க. மீண்டும் ஒரு முறை அமைச்சரை  பார்க்க ஆசைப்படுவதாக கூறியிருக்கிறார். இந்த விஷயத்தை காரில் ஏறி அமர்ந்து விட்ட அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் கூறப்பட்டது. ” BSD சார் போய் விட்டதாக கூறினார்கள் என்றபடி காரைவிட்டு இறங்கிய அமைச்சர் மீண்டும் செல்வதுரை சாரிடம் சென்று பாதம் தொட்டு வணங்கி ஆசி பெற்று அவரிடம் ஓரிரு நிமிடங்கள் பேசி விட்டு விரைவில் உங்கள் வீட்டிற்கு வந்து பார்க்கிறேன் என கூறி விட்டு சென்றிருக்கிறார் அமைச்சர் செந்தில்பாலாஜி.. இந்த நிகழ்வினை கரூர் பத்திரிக்கையாளர் கு. சிவராமன் தனது பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.. மேலும் இந்த நிகழ்ச்சியின்போது தான் படித்த வகுப்பிற்கு சென்ற அமைச்சர் செந்தில்பாலாஜி அங்கு சிறிது நேரம் அமர்ந்து விட்டு சென்றார்.. 

LEAVE A REPLY