“விஜயபாஸ்கர் குவித்த சொத்துகள்”… சீரியலை துவக்கிய செந்தில்பாலாஜி..

495
Spread the love

கடந்த 5 ஆண்டுகளில் கரூர் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது தம்பி சேகர் ஆகியோர் கோடிக்கணக்கான சொத்துக்களை கரூர் நகரம் மற்றும் மாவட்டப்பகுதிகளில் வாங்கிக்குவித்து இருப்பதாக குற்றஞ்சாட்டியிருந்த கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் செந்தில்பாலாஜி இவை குறித்து ஆதாரங்கள் வெளியிடப்படும் என எச்சரித்திருந்தார்.. அந்த வகையில் நேற்று மதியம் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது தம்பி சேகர் ஆகியோர் பங்குதாரர்களைக் கொண்ட ரெயின்போ டையர்ஸ் மற்றும் ரெயின்போ புளூமெட்டல்ஸ் நிறுவனங்களின் பெயரில் கரூர்-கோவை ரோட்டில் உள்ள எல்ஜிபி பெட்ரோல் பங்க் இடம் வாங்கப்பட்டதற்கான  ஆதாரம் வெளியாகியுள்ளது…

இது தொடர்பான தகவல்…கரூர்- கோவை ரோட்டில் சுமார் 15 ஆயிரம் சதுர அடியில் அமைந்திருப்பது எல்ஜிபி பெட்ரோல் பங்க். புகழ்பெற்ற பஸ் கட்டமைப்பு நிறுவனமான எல்ஜிபி நிறுவனத்தின் பங்குதாரர் எல் பாலகிருஷ்ணனுக்கு சொந்தமானது.  நகரின் முக்கியமான இடத்தில் அமைந்திருக்கும்  பெட்ரோல் பங்கின் இடம் பல நூறு கோடி  இருக்கும். இந்த நிலையில் எல்ஜிபி பெட்ரோல் பங்கின் ஒரு பகுதியை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது சகோதரர் சேகர் ஆகியோர் பங்குதாரர்களாக கொண்ட ரெயின்போ டையர்ஸ் மற்றும் ரெயின்போ புளுமெட்டல் நிறுவனம் வாங்கியுள்ளதாக ஆதாரம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.  30-8-2019ம் ஆண்டு கரூர் மாவட்டம் மண்மங்கலம் வட்டம் ஆண்டாங்கோவில் கீழ்பாகம் கிராமம், செல்வநகர் கதவு எண் 6/136 ல் இயங்கி வரும் ரெயின்போ டையர்ஸ் நிறுவனத்திற்காக சர்வே எண் 310/1 (OLD), , 455(NEW) இடத்தை பத்திரஎண் 6896/2019ல் எல்ஜி பாலகிருஷ்ணன் அண்டு பிரதர்ஸ் லிமிட் எழுதிக்கொடுத்துள்ளது.. இவை தொடர்பான பத்திரங்களும் வெளியாகியுள்ளன..

சாதாரண நிலையில் இருந்து அமைச்சரான விஜயபாஸ்கர் மற்றும் அவரது சகோதர் சேகருக்கு கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பு இடத்தை வாங்க பணம் எப்படி? வந்தது என்பதனை வாக்குகேட்க வரும் அதிமுக வேட்பாளர் எம்ஆர் விஜயபாஸ்கரிடம் தான்  வாக்காளர்கள் கேள்வி கேட்க வேண்டும் என்றும் செந்தில்பாலாஜி கேட்டுக்கொண்டுள்ளார்.. விஜயபாஸ்கர் குவித்த சொத்துக்கள் என்கிற பெயரில் சீரியலை ஆரம்பித்திருக்கிறார் செந்தில்பாலாஜி.. க்ளைமாக்ஸ் ஏப்ரல் மாதம் முதல்வாரத்தில் இருக்கு என்கின்றனர் கரூர் வாசிகள்… 

LEAVE A REPLY