செந்தில்பாலாஜி நாளை மனு தாக்கல்.. கூட்டணி கட்சியினருக்கு அழைப்பு

497
Spread the love

அரவக்குறிச்சி வேட்பாளர் செந்தில்பாலாஜி நாளை காலை 11 மணியில் இருந்து 12 மணிக்குள் வேட்புமனு தாக்கல் செய்கிறார். அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 சட்டமன்ற இடைத் தேர்தல் அடுத்த மாதம் 19ம் தேதி நடைபெறுகிறது. இதில் போட்டியிடும் திமுக, அதிமுக மற்றும் அமமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். திமுக வேட்பாளராக கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான செந்தில்பாலாஜி போட்டியிடுகிறார்.

இதனையொட்டி அரவக்குறிச்சி ஏவிஎம் கார்னரில் திமுக தேர்தல் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா  நாளை காலை 9.30 மணிக்கு நடைபெறுகிறது. இதை கட்சியின் துணை பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் திறந்து வைக்கிறார். அதன் பின்னர் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் புடைசூழ ஊர்வலமாக வேட்பாளர் செந்தில்பாலாஜி அரவக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார். இந்த நிகழ்ச்சிகளில் திமுக, காங்கிரஸ், கம்யூ., கட்சிகள், மதிமுக, விசிக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொமதேக உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என கரூர் மாவட்ட திமுக கேட்டுக் கொண்டுள்ளது. 

LEAVE A REPLY