திருச்சி மாவட்டத்தில் திருச்சி மாநகர் அருகே காவிரி- கொள்ளிடம் ஆறுகளின் இடையே ஒரு தீவாக அமைந்துள்ளது ஸ்ரீரங்கம். 108 திவ்ய தேசங்களில் ஒன்று ஸ்ரீரங்கம். ஸ்ரீராமபிரான் பூஜித்த பெருமை கொண்டது ஸ்ரீரங்கம்.

ராமாவதாரம், திருமாலின் 7-வது அவதாரம் என்பது சிறப்பு. ஏழு உலகங்களை உள்ளடக்கிய பொருளில், ஏழு பிரகாரங்கள், ஏழு திருமதில்கள் கொண்டது ஸ்ரீரங்கம் ஆலயம். ஸ்ரீரங்கம் கோயிலில் மேலும் பல ‘ஏழேழு சிறப்புகள் இருக்கின்றன.

அவற்றை காணலாம்….

தங்க குதிரை பவனி : ஸ்ரீரங்கம் நம்பெருமாள் வருடத்திற்கு ஏழு முறை மட்டும், தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருள்வார்.

அந்த 7 விழாக்கள்:

விருப்பன் திருநாள்
வசந்த உற்சவம்
விஜயதசமி
வேடுபறி
பூபதி திருநாள்
பாரிவேட்டை
ஆதி பிரம்மோற்சவம்.

தீர்த்தவாரி 7 :

சந்திர புஷ்கரணியில் ஆறு முறை, கொள்ளிடத்தில் ஒருமுறை என மொத்தம் ஏழு முறை, ஸ்ரீரங்கப் பெருமாள் தீர்த்தவாரி கண்டருள்வார்.

விருப்பன் திருநாள்-சித்திரை
வசந்த உற்சவம்-வைகாசி
பவித்ரோற்சவம்-ஆவணி
ஊஞ்சல் உற்சவம்- ஐப்பசி
அத்யயன உற்சவம்-மார்கழி
பூபதி திருநாள்-தை
பிரமோற்சவம்-பங்குனி

வீதி உலா 7 : நம்பெருமாள் வருடத்திற்கு ஏழு முறை மட்டுமே, திருக்கோவிலை விட்டு வெளியே எழுந்தருளுவார்.

சித்திரை
வைகாசி
ஆடி
புரட்டாசி
தை
மாசி
பங்குனி

உற்சவம் 7: நம்பெருமாள் ஆலயத்தில் நடைபெறும் உற்சவங்களின் போது, அங்குள்ள அனைத்து மண்டபங்களுக்கும் எழுந்தருள்வார். ஆனால் ஏழு உற்சவத்தின் போது மட்டும் குறிப்பிட்ட மண்டபங்களை தவிர மற்ற மண்டபங்களுக்கு பெருமாள் எழுந்தருள மாட்டார்.

அந்த 7உற்சவங்கள்:-

வசந்த உற்சவம்
சங்கராந்தி
பாரிவேட்டை
அத்யயன உற்சவம்
பவித்ர உற்சவம்
ஊஞ்சல் உற்சவம்
கோடை உற்சவம்.

ஆழ்வார்கள் சன்னதி 7 : ஸ்ரீரங்கத்தில் 12 ஆழ்வார்களுக்கும் சன்னிதி உள்ளது. இந்த 12 ஆழ்வார்களும், 7 தனிச் சன்னிதிகளில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.

பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார் பேயாழ்வார், நம்மாழ்வார்
திருமங்கை ஆழ்வார், மதுரகவி ஆழ்வார்
குலசேகர ஆழ்வார்
திருப்பாணாழ்வார்
தொண்டரடிபொடி ஆழ்வார்
திருமழிசை ஆழ்வார்
பெரியாழ்வார், ஆண்டாள்

மற்ற சிறப்புக்களை நாளை காணலாம்…

LEAVE A REPLY