ஷாந்தனு-மனைவி டான்ஸ்… வாத்தி ஸ்டெப்பு வீடியோ

233
Spread the love
மாஸ்டர் படத்தின் வாத்தி கமிங் பாடலில் வரும் சிறப்பு டான்ஸ் ஸ்டெப் ஒன்றை சவாலாக வைத்து பலர் வீடியோ வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் நடிகர் ஷாந்தனுவும் அவரது மனைவியும் நடனக் குழுவுடன் சேர்ந்து வாத்தி ஸ்டெப்பு  சேலஞ்ச்க்காக நடனமாடியுள்ளனர். இதனை கிகி தனது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார்.

மாஸ்டர் படத்தில்  ஷாந்தனு  முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்தான் படத்தின் திருப்புமுனையாக இருப்பார் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். மாஸ்டர் படம்  ரொம்ப நாளைக்கு பிறகு ஷாந்தனுவுக்கு நல்ல கதாபாத்திரத்தை கொடுத்திருப்பதாகவும், இந்த படத்துக்கு பிறகு ஷாந்தனுவைத் தேடி நல்ல கதைகள் தொடர்ந்து வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அதற்காகவே மிகவும் மெனக்கெட்டு இந்த படத்துக்கு அதிக புரமோஷன் செய்து வருகிறார் ஷாந்தனு.

 

LEAVE A REPLY