சிறையில் மகனைப் பார்த்து கதறிய ஷாரூக்கான்…

310
Spread the love

மும்பை-கோவா சொகுசு கப்பலில் நடைபெற்ற பார்ட்டியின் போது இந்தி நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட சிலர், போதைப்பொருள் பயன்படுத்துவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தி கைது செய்தனர். தற்போது, மும்பையின் ஆர்தர் சாலையில் உள்ள சிறையில் ஆர்யன் கான் உள்ளிட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். ஆர்யன் கானின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் நிராகரித்த நிலையில், அவர் 20ம் தேதி வரை சிறையில் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. சிறையில் சோர்ந்து இருக்கும் ஆர்யன்கானுடன், ஷாருக்கும், அவரது மனைவி கவுரியும் வீடியோ கால் மூலம் பேசினர். ஆர்யன்கான் தனது பெற்றோருடன் சுமார் 10 நிமிடங்கள் பேசினார். பெற்றோருடன் வீடியோ அழைப்பில் பேசும்போது உணர்ச்சிவசப்பட்டு அழுதார். சிறையில் இருந்த ஆரியன் கானை வீடியோ காலில் கண்டதும் ஷாருக்கானும், கவுரியும் கண்ணீர் விட்டனர்’ என்றனர்.

LEAVE A REPLY