அரசு பள்ளி மாணவர்களுக்கு செருப்புக்கு பதில் ஷூ!

156
Spread the love

கோபிச்செட்டிப்பாளையத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டி: தமிழ்நாடு முழுவதும் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு செருப்புக்கு பதில், இனி ஷூக்கள் வழங்கப்படும். வரும் கல்வியாண்டு முதல் இது செயல்படுத்தப்படும். 11, 12ஆம் வகுப்பு படிக்கும் 10 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்களுக்கு இம்மாத இறுதிக்குள் இலவச மடிக்கணினிகள் வழங்கப்படும். 

மேலும் 2017-18ஆம் ஆண்டு 12ஆம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு 3 மாதத்திற்குள் மடிக்கணினி கிடைக்கும். வகுப்பறையில் நடத்தப்படும் பாடங்கள் யூ-டியூப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. விரைவில் யூ-டியூப் பாடத் திட்டம் மாணவ, மாணவிகளுக்கு உருவாக்கப்படும். இவ்வாறு பேட்டியளித்தார்.

LEAVE A REPLY