எஸ்ஐ தேர்வு.. பிட் அடித்த போலீஸ் மீது நடவடிக்கை

123

தமிழகம் முழுவதும் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் சார்பில் சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கு காவல்துறையினருக்கான எழுத்து தேர்வு 12ம் தேதி நடந்தது. விழுப்புரம் தனியார் கல்லூரியிலும் நடந்த தேர்வின் போது தேர்வு மையத்தில் உள்ள ஒரு அறையில் டிஎஸ்பி ரவீந்திரன் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தார். அப்போது விழுப்புரம் மாவட்டம் அனந்தபுரம் போலீஸ் காவலர் மணி துண்டு சீட்டை மறைத்து வைத்து பார்த்து எழுதி கொண்டிருந்தார். இதை பார்த்த டிஎஸ்பி ரவீந்திரன் போலீஸ்காரர் மணியை சோதனை செய்தார். அப்போது அவர் விடைகள் இருக்கும் பேப்பர்களை வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் வைத்திருந்த பிட்டுகள் மற்றும் எழுதிய விடைத்தாள் ஆகியவற்றை வாங்கிய அதிகாரிகள் அவரை தேர்வு அறையில் இருந்து வெளியேற்றினர். தற்போது காவலர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் வை கைப்பற்றப்பட்டது.

பின்னர் போலீஸ்காரர் மணி தேர்வு அறையில் இருந்து அதிகாரி மூலம் வெளியேற்றப்பட்டார். இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் கூறுகையில், எழுத்து தேர்வில் காப்பி அடித்த போலீஸ்காரர் மணி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். அவர் 3 ஆண்டுகளுக்கு தேர்வு எழுதவும் தடை விதிக்கப்படும் என்றார்.

 

LEAVE A REPLY