வில்சனை சுட துப்பாக்கி வாங்கிக்கொடுத்தவர் பெங்களூரில் கைது

188
Spread the love
தமிழக-கேரள எல்லை பகுதியான களியக்காவிளை சந்தை ரோட்டில் உள்ள சோதனைச்சாவடியில் பணியில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்  வில்சன் (வயது 57) கடந்த 8-ந்தேதி இரவு பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக பயங்கரவாதிகளான அப்துல் சமீம், தவுபிக் ஆகிய 2 பேரையும் போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகிறார்கள். இந்நிலையில்,வில்சனை சுடுவதற்கு  பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி, மும்பையில் இருந்து கொண்டு வரப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.  பயங்கரவாதிகளுக்கு சிம்கார்டு கொடுத்து உதவியதாக 9 பேரை கியூ பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். பெங்களூருவில் கைதான இஜாஸ் பாஷா என்பவர் தான் மும்பை சென்று 4 பிஸ்டல் ரக துப்பாக்கிகளை வாங்கி வந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இஜாஸ் பாஷாவிடம் இருந்து 3 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பெங்களூருவில் கைதான இஜாஸ் பாஷா எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
 

LEAVE A REPLY