தமிழக போலீசை தாக்க.. கேரளாவில் திட்டம் தீட்டிய தீவிரவாதிகள்

151

கன்னியாகுமாி மாவட்டம் களியக்காவிளை எஸ்எஸ்ஐ வில்சனை தீவிரவாதிகள் முகமது மற்றும் தவுபிக் ஆகியோரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். சம்பவத்தை முடித்த அவர்கள் கேரளாவிற்கு தப்பி விட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். தமிழக போலீசில் ஒருவரை கொலை செய்ய வேண்டும் என தீவிரவாதிகள் இருவரும் கேரளாவில் தங்கி திட்டம் தீட்டியுள்ளனர்.

வில்சனை சுடுவதற்கு 1 மணிநேரம் முன் நொய்யாற்றங்கரையில் கொலையாளிகள் இருவரும் இருந்தது தற்போது போலீசாருக்கு தெரியவந்துள்ளது.  களியக்காவிளை அருகில் உள்ள நொய்யாற்றங்கரையில் முகமது, தவுபீத் 2 நாட்கள் அடிக்கடி வந்து சென்றதும்  போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. கொலை செய்த சமயத்தில் குற்றவாளிகள் பயணித்த ஆட்டோ ஓட்டுநரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழகத்தோடு கேரளாவில் தங்க வசதி இருப்பதால் தீவிரவாதிகள் இருவரும் கேரளாவை தேர்ந்தெடுத்தாக போலீசார் கூறுகின்றனர். 

LEAVE A REPLY