சிந்தியா காங்கிரசுக்கு குட்பை?

258
Spread the love

மத்திய பிரதேசத்தின் காங்., தலைவரும், முன்னாள் எம்.பி.,யுமான ஜோதிராதித்ய சிந்தியா, டுவிட்டரில் தனது பயோடேட்டாவில் இருந்து காங்., அடையாளத்தை நீக்கி உள்ளார். பேஸ்புக் மற்றும் டிவிட்டர் பயோடேட்டாக்களில் காங்., தலைவர் என்ற அடையாளத்தை மாற்றி, சமூக சேவகர் மற்றும் கிரிக்கெட் ரசிகர்கள் என்று மட்டுமே ஜோதிராதித்ய சிந்தியா தன்னை அடையாளப்படுத்திக் கொண்டுள்ளார்.

மேலும் காங்., கட்சியின் பதிவுகளை மேற்கோள் காட்டி அவர் பதிவிட்ட கருத்துக்களையும் அவர் நீக்கி உள்ளார். காஷ்மீரில் 370 பிரிவு ரத்து செய்யப்பட்ட போது மத்திய அரசுக்கு ஆதரவாக சிந்தியா கருத்து வெளியிட்டதால், அவர் பா.ஜ.,வில் சேர உள்ளதாகவும் தகவல் பரவியது. இந்நிலையில் தற்போது தனது டுவிட்டர் பக்கத்தில் இருந்து காங்., அடையாளத்தை அவர் நீக்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

LEAVE A REPLY