கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் அபாயம்.. சிங்கப்பூரில் ஆரஞ்ச் அலர்ட்

1637
Spread the love

சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனா வைரசால் அதிக பாதிப்பு சிங்கப்பூர் என உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. இதன்காரணமாக சிங்கப்பூர் அரசு முதலில் மஞ்சள் ‘அலர்ட்’ அறிவித்தது. தற்போது சீனாவிலிருந்து திரும்பியவர்களோடு தொடர்பில்லாத உள்ளூர்வாசிகள் என 43 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளதால் தற்போது  ‘ஆரஞ்சு அலர்ட்’ கொடுக்கப்பட்டுள்ளது. ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டதையடுத்து, கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களும், அவர்களுடன் தொடர்பில் இருந்த அனைவரும் சுகாதார அமைச்சகத்தின் கண்காணிப்பின்கீழ் கொண்டுவரப்பட உள்ளனர். கொரோனா தாக்குதலைக் கட்டுப்படுத்துவதில், சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம், தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. 

LEAVE A REPLY