திருச்சியில் கைத்தறி கண்காட்சி…. திருச்சி கலெக்டர் துவக்கி வைப்பு…

62
Spread the love

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு கைத்தறி கண்காட்சி மத்திய ஜவுளி துறை அமைச்சகம் மற்றும் தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல் துறை மூலமாக இன்று முதல் 12.01.2021 வரை 15 நாட்கள் நடைபெறுகிறது. திருச்சி, உறையூரில் அமைந்துள்ள G.K.M. மினி ஹாலில் நடைபெறும் இக்கைத்தறி கண்காட்சியை இன்று திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு  குத்து விளக்கு ஏற்றி முதல் விற்பனையைத் துவக்கி வைத்தார். இந்த சிறப்பு கைத்தறி கண்காட்சியில் சுமார் 40 அரங்குகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் உள்ள கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களால் உற்பத்தி செய்யப்படும் சேலைகள், வேட்டிகள், பெட்ஷீட்டுகள், திரை சீலைகள், துண்டுகள், லுங்கிகள் மற்றும் அனைத்து ரகங்களும் நவீன வடிவமைப்பிலும் நேர்த்தியான வண்ணங்களிலும் 30% அரசு தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்படவுள்ளது.  இந்த சிறப்பு கைத்தறி கண்காட்சிக்கு விற்பனை இலக்கு ரூ.55.00 இலட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கைத்தறி கண்காட்சி காலை 9.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை நடைபெறும். 

LEAVE A REPLY