5 வயது சிறுவனை அடித்துக்கொன்ற கொடூர தந்தை….

83
Spread the love

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே சோழியம்பாக்கம் கிராமத்தில் வசித்து வரும் தம்பதி முத்து- நீலா. இவர்களது மகன் கார்த்திக், 5ம் வகுப்பு படித்து வந்தார். கார்த்திக் அதிக குறும்புத் தனமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், சிறுவன் உடலில் பலத்த காயங்களுடன் கோட்டகரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பது அம்பலமானது.

இது குறித்து நீலா அளித்த புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், குறும்பு தனத்துடன் இருந்ததால் குடிபோதையில் முத்து கார்த்திக்கை அடித்ததும் அதில் மூச்சுத்திணறி சிறுவன் உயிரிழந்ததும் தெரிய வந்தது போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து முத்துவை கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

LEAVE A REPLY