பற்களை ஆரோக்கியமாக வைக்கும் பெருஞ்சீரகம்…

115
  • நாம் சாப்பிடும் சில உணவுகள் உடனே செரிக்காமல் நெஞ்செரிச்சலை ஏற்படுத்திவிடும், மேலும் சிறு குழந்தைகளுக்கு வாய்வு தொல்லை, வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். அந்த சமையங்களில் சிறிதளவு சோம்பை வெந்நீரில் போட்டு நன்றாக கொதிக்க வைத்து கொடுத்தால் வயிற்றில் ஏற்படும் அனைத்து கோளாறுகளும் சரியாகும்.
  • பொதுவாக நாம் அசைவ உணவுகளை சாப்பிடும்போது அனைவருக்கும் வாய் துர்நாற்றம் அடிக்கும். அந்த நேரத்தில் பெருஞ்சீரகத்தை நன்கு மென்று சாப்பிட்டு வந்தால் இந்த வாய் துர்நாற்றங்கள் நீங்கி, பற்களை ஆரோக்கியமாக வைத்து கொள்ள உதவுகிறது.
  • சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ஒரு சிறந்த மருந்தாக இந்த பெருஞ்சீரகம் இருக்கின்றது என்று பல மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றது. சோம்பில் குறிப்பாக வைட்டமின் சி சத்து அதிகளவு உள்ளதால், இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சரியான விகிதத்தில் வைத்துக்கொள்ள இந்த பெருஞ்சீரகம் பெரிதும் உதவுகிறது.
  • உடலை பல வித நச்சுக்களின் பாதிப்பிலிருந்து நீக்கும் வேலையை நமது கல்லீரல் தொடர்ந்து செய்து வருகிறது. ஒரு நாளைக்கு ஒரு முறையாவது சிறிதளவு பெருஞ்சீரகங்களை சாப்பிட்டு வருவதால் கல்லீரல் பலம் பெரும்.

LEAVE A REPLY