பிரிய வாய்ப்பு இல்லை.. சோனியாவை சந்தித்த அழகிரி ‘சமாளிப்பு’ பேட்டி

144
திமுகவும், காங்கிரசும் இணைந்த கரங்கள், பிரிய வாய்ப்பில்லை என சோனியா காந்தியை சந்தித்த பின் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேட்டி அளித்தார். 
டெல்லியில் சோனியா காந்தியைச் சந்தித்த பின்னர் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
 
திமுக காங்கிரஸ் கூட்டணி குறித்து சோனியாவுடன் பேசப்பட்டது. உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிக்கை குறித்து சோனியா காந்தி எதுவும் கேட்கவில்லை அரசியலில் என்ன நடக்கும் என ஆரூடம் கூற முடியாது. 
திமுகவும் காங்கிரசும் இணைந்த கரங்கள். இணைந்த கரங்கள் பிரிய வாய்ப்பில்லை. திமுக – காங்கிரஸ் கூட்டணியில் சலசலப்பு இல்லை என கூறினார்.

LEAVE A REPLY