22 பேரின் உயிரை காப்பாற்றிய பிரபல நடிகர்…..

69
Spread the love

கொரோனா 2வது அலை மிக தீவிரமாக பரவி வருகிறது. இதன் காரணமாக மக்கள் விழுப்புணர்வுடன் இருக்க அரசு கேட்டு கொண்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று பெங்களூரு உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,  திடீரென ஆக்ஸிஜன் சிலிண்டர் பற்றாக்குறை ஏற்பட்டது. ஆஸ்பத்திரியில் ஆக்ஸிஜன் சிலிண்டர் கேட்டு பல தரப்பில் கேட்டனர், ஆனால் கிடைக்கவில்லை.

அதனை தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்யநாராயணன் என்பவர் , தனக்கு தெரிந்த நடிகர் சோனு சூட்டின் அறக்கட்டளை உறுப்பினர் ஒருவரை தொடர்பு கொண்டு உதவி கேட்டுள்ளார். உடனடியாக சோனு சூட்டும் தனக்கு தெரிந்தவர்கள் அனைவருக்கும் தகவலை தெரிவித்து ஆக்ஸிஜன் சிலிண்டருக்கு ஏற்பாடு செய்து முதலில் ஒரு சிலிண்டர் ஏற்பாடு செய்து ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அதன் பின்  சோனுசூட்டும் அவரது அணி உறுப்பினர்களும் சில மணி நேரத்தில் மேலும் 15 சிலிண்டர்களை ஆஸ்பத்திரிக்கு ஏற்பாடு செய்து அனுப்பிவைத்தனர். இதன் மூலம் 22 கொரோனா நோயாளிகளின் உயிர் காப்பாற்றப்பட்டது. சோனு சூட் செய்த இந்த உதவிக்காக பல தரப்பிலிருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

LEAVE A REPLY