சூரியூர் ஜல்லிக்கட்டில் நின்று விளையாடிய காளைகள்…

286
Spread the love

திருச்சி மாவட்டத்தின் முதல் ஜல்லிகட்டு போட்டியானது சூரியூரில் இன்று நடைபெற்றது. சூரியூர் கோவில் காளையான இளைய காசிக்கு ஊர் மக்கள் மேள தாளங்கள் முழங்க வாடிவாசலுக்கு அழைத்து வந்தனர். இந்த மாட்டு வேடிக்கையில் இதில் 600 காளைகளும், 500 மாடுபிடி வீரர்களும் பங்கேற்கின்றனர். முதலில் காளைகளுக்கு கால்நடை மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். தகுதியுள்ள காளைகள் மட்டுமே வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டனர். இதே போல் திருவெறும்பூர் வட்டார மருத்துவ அலுவலர் சுகுமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் மாடுபிடி வீரர்களுக்கு உடல் தகுதி பரிசோதனை செய்து பின்னர் மாடுபிடிக்க அனுமதிக்க பட்டனர்.
போட்டி துவங்கும் முன் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் உறுதி மொழி எடுத்தனர். இறுதியில் அதிக காளைகளை அடக்கிய சிறந்த வீரருக்கான பரிசு வீரப்பட்டியைச் சேர்ந்த கார்த்திக்கிற்கு அதிமுக மாநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் எம்பியுமான குமார் சார்பில் மோட்டார் சைக்கிள் பரிசு வழங்கப்பட்டது. இரண்டாம் பரிசு அயன்புத்தூர் கிராமத்தை சேர்ந்த பிரசாந்துக்கு ப்ரிட்ஜ் வழங்கப்பட்டது. 

LEAVE A REPLY