வருந்துகிறேன் மோடி ஜி.. மம்தா அறிக்கை

511
Spread the love
மோடி இரண்டாவது முறையாக நாளை பிரதமராக பதவியேற்கிறார். குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெறும் இதற்கான நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள், மாநில முதல்வர்கள் மற்றும் வெளிநாட்டு தலைவர்களுக்கு அழைப்பு விடப்பட்டு உள்ளது. 
இதுபற்றி மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி கூறும்பொழுது, நான் மற்ற முதல் மந்திரிகளிடம் பேசியுள்ளேன்.  இது ஒரு மரபு ரீதியிலான நிகழ்ச்சி.  அதனால் இதில் கலந்து கொள்வது என நாங்கள் நினைத்தோம்.  நான் இந்த விழாவில் கலந்து கொள்கிறேன் என்று நேற்று கூறினார். 
இந்நிலையில், மோடி பிரதமராக பதவியேற்கும் விழாவில் பங்கேற்கவில்லை என மம்தா இன்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘வாழத்துக்கள் பிரதமர் நரேந்திர மோடி ஜி.  அரசியலமைப்பு அழைப்பினை ஏற்று பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வது என்பதே எனது திட்டம்.  எனினும், கடந்த ஒரு மணிநேரத்தில், மேற்கு வங்காளத்தில் அரசியல் வன்முறைக்கு 54 பேர் பலியாகி உள்ளனர் என பா.ஜ.க. கூறியுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்துள்ளன. 
எனது கவனத்திற்கு வந்த இந்த தகவலில் உண்மையில்லை. அதனால், இந்த விழாவில் கலந்து கொள்ள கூடாது என நான் கட்டாயப்படுத்தப்பட்டு உள்ளேன்.  இதற்காக மோடி ஜி, நான் வருத்தம் தெரிவித்து கொள்கிறேன்’ என்று தெரிவித்து உள்ளார்.
 
 
 

LEAVE A REPLY