2 மணி நிலவரம்..தெ.ஆ. பாலோ ஆனிலும் சொதப்பல்

76

இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் 3ஆவது டெஸ்ட் போட்டி ஜார்க்கண்ட் மாநிலம்  ராஞ்சியில் நடந்து வருகிறது. இதன் முதல் இன்னிங்சில் இந்திய அணி 9 விக்கெட்டுக்கு 497 ரன்கள் எடுத்தபோது டிக்ளேர் செய்தது.  நேற்று 2 ஆவது நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்ரிக்க அணி முதல் இன்னிங்சில் 2 விக்கெட்டுக்கு 9 ரன்கள் எடுத்திருந்தது. இன்று 3வது நாளில் தென் ஆப்ரிக்கா, இந்திய பவுலர்களை சமாளிக்க முடியாமல் திணறியது. , ஹம்சா 62,  பவுமா, லிண்டே மட்டுமே சற்று தாக்குப்பிடித்து தலா 32 ரன் எடுக்க, கேப்டன்  டூ ப்ளஸி 1 என மற்ற வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் நடையை கட்டினர். இதனால் அந்த அணி 162 ரன்களுக்கு ஆட்டமிழந்து பாலோ ஆன் பெற்றது. 

2 வது இன்னிங்சிலும் அந்த அணி வீரர்கள் சொதப்பலாக ஆடி வருகின்றனர். டிகாக் 5 ரன்னில் உமேஷ் வேகத்திலும், ஹம்சா சமியிடம் டக் அவுட் ஆகி வெளியேறி ஏமாற்றமளித்தனர். 2 மணி நிலவரப்படி அந்த அணி 2 விக்கெட் இழப்புக்கு 14 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின்னும் அந்த அணி வீரர்கள் பொறுப்பின்றி ஆடி விக்கெட்களை இழந்தனர்.  டூபிளஸ்சி 4, பவுமா 0, என ஆட்டமிழந்தனர். ரஇந்தியாவின் முதல்இன்னிங்ஸ் ஸ்கோரை எட்டவே அவர்களுக்கு இன்னும் 309 ரன்கள் தேவை. எனவே இந்திய அணி தற்போதைய நிலவரப்படி இன்னிங்ஸ் வெற்றியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. 

LEAVE A REPLY