வீட்டையே தானம் செய்த எஸ்பிபி…..

4249
எஸ்.பி. பாலசுப்ரமணியம் இந்தியாவின் சிறந்த பாடகர்களில் ஒருவர் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பெரும்பான்மை மொழிகளில் பாடல்களை பாடியவர். இவர் தனது பூர்வீக வீடு ஒன்றை காஞ்சி மடத்துக்கு தானம் செய்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

 
இந்த தகவல் குறித்து துக்ளக் ஆசிரியர் எஸ் குரு மூர்த்தியின் ட்விட்டர் கணக்கில் கூறப்பட்டுள்ளதாவது, ” எஸ் பி பாலசுப்ரமணியம் நெல்லூரில் இருக்கும் தனது பூர்வீக வீட்டை காஞ்சி மடத்துக்கு தானமாக அளித்துள்ளார். காஞ்சி ஆச்சார்யா ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி முன்னிலையில் அவர் பாடிக்கொண்டிருக்கிறார்,” இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். இவரது குரலில் இந்தியாவின் 16 மொழிகளில் பாடல்கள் உருவாகியுள்ளன. ஆந்திர பிரதேச அரசு சார்பில் 25 மாநில விருதுகளும், தமிழகம் மற்றும் கர்நாடக அரசுகளின் பல மாநில விருதுகளையும் பெற்றவர். அதிக திரைப்பட பாடல்கள் பாடியவர் எனும் கின்னஸ் சாதனையும் படைத்தவர். இவருக்கு இந்திய அரசு சார்பில் பத்ம ஸ்ரீ மற்றும் பத்ம பூஷன் விருதுகளும் வழங்கி சிறப்பிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY