கந்த சஷ்டியின் சிறப்பு!

100
Spread the love

பொதுவாக குழந்தை வரத்திற்காக இருக்கும் விரதம் சஷ்டி விரதம். தீபாவளியைத் தொடர்ந்து வரும் சஷ்டியை கந்த சஷ்டி, மகா சஷ்டி என்று மிகப்பெரிய திருநாளாக கடைப்பிடிக்கப்படுகிறது. 

குழந்தை வரம் வேண்டும் தம்பதிகள் இருவரும் இந்த சஷ்டி விரதம் இருக்கலாம். சில குடும்பத்தில் ஆண் விரதம் இருப்பார். பெண் விரதம் இருக்கமாட்டார். சில இடத்தில் பெண் விரதம் ஏற்று ஆண் விரதம் இல்லாமலும் இருப்பதும் உண்டு.  விரதம் என்றால் காப்பது என்று பொருள். உங்களால் காக்க முடிந்தால் விரதம் இருக்கலாம். கணவரால் அல்லது மனைவியால் விரதம் இருக்க முடியாதவர்கள் யாரேனும் ஒருவர் கூட விரதம் இருப்பது நல்லது. 

 மகா விரதம்:
இந்த கந்த சஷ்டி விரதம் எனும் 6 நாட்கள் உணவு அருந்தாமல் விரதம் இருக்கும் முறை உண்டு. அல்லது மாதம் ஒரு முறை வரும் சஷ்டி தினத்தில் விரதம் இருப்பது உகந்தது. எந்த விரதம் இருந்தாலும் தண்ணீர் நிறைய குடிப்பது நல்லது. தண்ணீர் குடிக்காமல் இருந்தால் உடல் இயக்கம் குறைந்து விடும். உணவு எடுத்துக் கொண்டால் தான் என்னால் இருக்க முடியும் என்பவர்கள், 5 நாட்களாவது விரதம் இருந்து, 6வது நாள் உணவு இல்லாமல் விரதம் இருப்பது உகந்தது. திருப்பரங்குன்றம், பழனி போன்ற ஆறுபடை வீடு கோயிலில் சென்று இருக்கலாம். அல்லது வீட்டில் கூட சஷ்டி விரதம் இருக்கலாம். 

LEAVE A REPLY