விவிஐபிகளுக்கு உள்ள அச்சுறுத்தலின் அடிப்படையில் அவர்களுக்கு பாதுகாப்புக்கு வழங்கப்பட்டு வருகிறது. இது எஸ்பிஜி, இசட் பிளஸ், இசட், ஒய் மற்றும் எக்ஸ் பிரிவுகளில் வழங்கப்படுகிறது. குடியரசு தலைவர், பிரதமர், காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் ராகுல், பிரியங்கா காந்திக்கு எஸ்பிஜி பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த பாதுகாப்பில், தேசிய பாதுகாப்பு படையில் பயிற்சி பெற்ற வீரர்கள், குண்டு துளைக்காத கார் உள்ளிட்ட பல அம்சங்கள் இடம் பெறும். 

இந்நிலையில் சோனியா, ராகுல், பிரியங்கா காந்திக்கு வழங்கப்பட்டு வந்த எஸ்பிஜி பாதுகாப்பை ரத்து செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களுக்கு சிஆர்பிஎஃப் வீரர்கள் வழங்கும் இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்படும் என தெரிகிறது.

முன்னதாக, முன்னாள் பிரதமர் என்ற அடிப்படையில் மன்மோகன் சிங்கிற்கு வழங்கப்பட்டு வந்த எஸ்பிஜி பாதுகாப்பை கடந்த ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY