6 பேருக்காக காத்திருந்த சிறப்பு ரயில்…திருச்சியில் ருசிகரம்

457

பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 317 பேருடன் இன்று திருச்சியில் இருந்து சென்னை வழியாக பஞ்சாப்பிற்கு தனி ரயில் புறப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இன்று மாலை 4 மணிக்கு ரயில் புறப்படும் என கூறப்பட்டிருந்ததால் அனைவரும் பஸ் உள்ளிட்ட வாகனங்களில் திருச்சி வந்திருந்தனர். இறுதியாக 317 பேர் வந்து விட்டார்களா? என அதிகாரிகள் கணக்குப்பார்த்த போது மதுரையில் இருந்து வரவேண்டிய 6 பேர் மட்டும் வராதது தெரியவந்தது.

  உடனடியாக அதிகாரிகள் மதுரை அதிகாரிகளுக்கு தொடர்பு கொண்டு கேட்ட போது தான் 6 பேரும் பஸ் வேனில் கிளம்பியிருக்கின்றனர். பள்ளி வேன் என்பதால் அதிக பட்ச வேகம் 40 கிமீ  என்பதால் வேன் மெதுவாக வந்துள்ளது. மதியம் 12 மணிக்கு துவங்கி 4 மணிக்கு ரயில் கிளம்பி விடலாம் என காத்திருந்த அதிகாரிகள் சோர்ந்து விட்டனர். ஒரு வழியாக 4.30 மணிக்கு வேன் வர அவசர அவசரமாக 6 பேரும் ரயிலுக்குள் ஏற பின்னர் சிறப்பு ரயில் புறப்பட்டது.  

LEAVE A REPLY