2 ஆக பிரிகிறது புதுகை அதிமுக.. மா. செ ஆவாரா விஜயபாஸ்கர்?

1674

தமிழகத்தில் உள்ள 15 மாவட்டங்களை கட்சி ரீதியாக பிரிக்க அதிமுக தலைமை முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டம் 2 ஆக பிரிக்கப்படுகிறது. ஏற்கனவே திமுகவில் வடக்கு, தெற்கு என 2 மாவட்டங்கள் உள்ளன. கந்தர்வகோட்டை, புதுக்கோட்டை, விராலிமலை ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளைக்கொண்ட மாவட்டத்திற்கு வக்கீல் செல்லப்பாண்டியனும், திருமயம், ஆலங்குடி, அறந்தாங்கி ஆகியவற்றைக்கொண்ட மாவட்டத்திற்கு ரகுபதியும்  பொறுப்பாளர்களாக உள்ளனர்.

அந்த பாணியில் 3 சட்டமன்ற தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர் என்கிற வகையில் புதுக்கோட்டை அதிமுகவும் 2 ஆக பிரிக்கப்படுகிறது. தற்போதைய மாவட்ட செயலளர் வைரமுத்து திருமயத்தை சேர்ந்தவர்  என்பதால் அநேகமாக திருமயம், ஆலங்குடி மற்றும் அறந்தாங்கி தொகுதிகளை உள்ளடக்கிய மாவட்ட செயலாளராக அவரே தொடர வாய்ப்பு என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே சமயம் கந்தர்வகோட்டை(தனி), புதுக்கோட்டை, விராலிமலை ஆகிய தொகுதிகளை உள்ளடக்கிய புதிய மாவட்டத்திற்கு யார் செயலாளர்? என்பது தான் பலரின் கேள்வியாக உள்ளது. அமைச்சர் விஜயபாஸ்கரின் தொகுதியாக விராலிமலையை உள்ளடக்கிய புதிய அதிமுக மாவட்டத்திற்கு விஜயபாஸ்கர் மாவட்ட செயலாளர் ஆவாரா? சில நாட்களில் தெரியும் .

LEAVE A REPLY