Skip to content

காரைக்கால் மீனவா்கள் மீது இலங்கை ராணுவம் துப்பாக்கி சூடு

  • by Authour

காரைக்காலை சேர்ந்த  மீனவர்கள் 20  படகுகளில்  இந்திய  எல்லையில்  நேற்று இரவு  மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது  விளக்குகளை அணைத்து விட்டு ரோந்து படகில் அங்கு வந்த இலங்கை கடற்படை   காரைக்கால் மீனவர்களை நோக்கி  துப்பாக்கி சூடு நடத்தியது. இதில் 2 மீனவர்கள் மீது குண்டு பாய்ந்தது. அவர்கள் ஆபத்தான நிலையில் யாழ்ப்பாணம்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். உடனடியாக 2 படகுகளில் இருந்த ேமலும் 11  மீனவர்களையும் இலங்கை ராணுவம் கைது செய்து   ராணுவ முகாமுக்கு கொண்டு சென்றது. அவர்களை கைது செய்து சிறையில் அடைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. இதைப்பார்த்த மற்ற மீனவர்கள்  வலைகளை போட்டு விட்டு  உயிர் தப்பி வந்தனர்.

காரைக்கால் மீனவர்கள் மீது இலங்கை ராணுவம் நடத்திய  துப்பாக்கி சூடு தமிழகம், காரைக்கால் மீனவாகள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.  இலங்கை ராணுவம் அத்து மீறி  கைது செய்த மீனவர்களை உடனே விடுதலை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என  மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

error: Content is protected !!