ஸ்ரீரங்கம் சித்திரை தேர் திருவிழா – தங்க கருட வாகனத்தில் நம்பெருமாள்

50
Spread the love

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கடந்த ஏப்ரல் 25-ந் தேதியில் இருந்து பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. ஆனால் கோவிலில் நித்தியப்படி கால பூஜைகள்  நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சித்திரை தேர்த்திருவிழா கடந்த 1-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி  கோவில் வளாகத்திலேயே நடைபெற்று வருகிறது.
விழாவையொட்டி நம்பெருமாள் தினமும் காலை, மாலை வேளைகளில் தங்க கருட, கற்பகவிருட்ச, சிம்ம, யாளி, இரட்டை பிரபை, கருட, சேஷ, அனுமந்த, ஹம்சவ, யானை, குதிரை ஆகிய வாகனங்களில் கருட மண்டபத்தில் எழுந்தருளினார்.
9ம் நாளான  இன்று நம்பெருமாள் சித்திரை தேரில் எழுந்தருளுவதற்கு பதிலாக

காலை 6.30 மணிக்கு கருடமண்டபத்தில் தங்க கருட வாகனத்தில் எழுந்தருளுளினார். பின்னர் அங்கிருந்து காலை 7.30 மணிக்கு புறப்பட்டு சந்திரபுஷ்கரணியில் தீர்த்தவாரி கண்டருளினார். பின்னர்  காலை 9.15 மணிக்கு ரேவதி மண்டபம் சென்றடைந்தார். அங்கு நண்பகல் 12 மணி முதல் மதியம் 3 மணிவரை நம்பெருமாள் திருமஞ்சனம் கண்டருளினார். அங்கிருந்து புறப்படும் நம்பெருமாள் இரவு 7.30 மணிக்கு  கண்ணாடி அறையை சென்றடைவார். விழாவின் நிறைவு நாள் அன்று நம்பெருமாள் ஆளும்பல்லக்கில் எழுந்தருளுவார்.

LEAVE A REPLY