ஸ்ரீரங்கம் நம்பெருமாள் காவிரி தாய்க்கு சீர் வழங்கினார்…..

149
Spread the love

திருச்சி ஸ்ரீரங்கம் நம்பெருமாள் ஆடிபெருக்கு அன்று காவிரி தாய்க்கு சீர் வழங்குவது வழக்கம். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டும், இந்த வருடமும் பக்தர்கள் வருகைக்கு தடை

விதிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக அம்மா மண்டபத்தில் எழுந்தருளுவதற்கு பதிலாக ஸ்ரீரங்கம் கோவில் வளாகத்தில் உள்ள ரங்க விலாச மண்டபத்திற்கு மதியம் வந்து சேர்ந்து அங்கு நம்பெருமாள் எழுந்தருளியிருந்தார். அங்கு அலங்காரம், அமுது கண்டருளி மாலை 4 மணிக்கு புறப்பட்டு காவிரி தாயாருக்கு சீர் கொடுக்க அம்மா மண்டபம் சென்றார்.   அம்மாமண்டபம் சென்றடைந்தது அங்கு ரெங்கநாதர் சார்பில்

காவிரித் தாய்க்கு சீர் வழங்கப்பட்டது. வழக்கமாக யானை மீது எடுத்து வரப்படும் சீர் காவிரி தாய்க்கு வழங்கப்படும். இந்த முறை யானை இன்றி மிக எளிமையாக சீர் வழங்கப்பட்டது. கோயில் பட்டர்கள், திருப்பணியாளர்கள்,  பணியாளர்கள் தவிர யாரும் அனுமதிக்கப்படவில்லை. கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, உதவி ஆணையர் கந்தசாமி, கண்காணிப்பாளர் வேல்முருகன் ஆகியோர் வைபவத்திற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

LEAVE A REPLY