பொங்கலை முன்னிட்டு ஸ்ரீரங்கத்தில் பாரிவேட்டை கண்டருளிய நம்பெருமாள்…..

77
Spread the love

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு  ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் நேற்று உபயநாச்சியார்கள் உடன் சங்கராந்தி மண்டபம் சென்று வந்தார். இன்று காலை  மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்ட அவர் கனுமண்டபம் வந்தார்.
அங்கு அவருக்கு சிறப்பு திருவாராதனங்கள் நடந்தன. பின்னர் மதியம் நம்பெருமாள்

 

தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி, பாரிவேட்டை நடத்தியபடி
ரெங்கா ரெங்கா கோபுரம் அருகிலுள்ள திருவந்திக்காப்பு மண்டபம் வரை
உலா வந்து ரெங்க விலாச மண்டபத்தில் பக்தர்களுக்கு சேவை சாதித்தருளினார். 
பின்னர் அங்கிருந்து புறப்பட்டு  மூலஸ்தானம் சென்றடைந்தார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் வேணுசீனிவாசன், இணை ஆணையர் அசோக்குமார், அறங்காவலர்கள் ரங்காச்சாரி, டாக்டர் சீனிவாசன், கவிதா மற்றும் கோவில் அர்ச்சகர்கள், அலுவலர்கள், பணியாளர்கள், கைங்கர்யபரர்கள் உள்ளிட்டோர் செய்திருந்தனர். 

LEAVE A REPLY