ஆண்டாளுடன் லட்சுமி தினமும் “வாக்கிங்”… ஸ்ரீரங்கத்தில் கண்கொள்ளா காட்சி..

1215
Spread the love

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலில் அரங்கனுக்கு கைங்கர்யம் பணியினை பல ஆண்டுகாலமாக ஆண்டாள் யானை செய்து வருகிறது. ஆண்டாளுக்கு உதவியாக  புது யானை லட்சுமி கடந்த அக்டோபர் 7ம் தேதி ஸ்ரீரங்கம் வந்தது. வந்த புதிதில் 10 நாட்களாக கோவிலுள்ள யானை கொட்டகையில் ஆண்டாளுடன் வைக்கப்பட்டிருந்த புது யானை லட்சுமி தற்போது பழக்கத்திற்காக கோவிலுக்கு கொண்டு வரப்படுகிறது.

  தினமும் ஆண்டாளுடன் சேர்ந்து லட்சுமியும் சக்கரத்தாழ்வார் சன்னதி, நந்தவனம்,  தாயார் சன்னதி,  ஆயிரங்கால் மண்டபம்,  ராமானுஜர் சன்னதி வழியாக ரங்கநாதரை 4 முறை சுற்றி தினமும் 6 கிமீ வாக்கிங் பயிற்சி மேற்கொள்கிறது. தினமும் மாலை நேரத்தில் இரண்டு யானைகளும் வாக்கிங் செல்வதை பக்தர்கள் மகிழ்ச்சியுடன் பார்க்கின்றனர்.. 

LEAVE A REPLY