ஸ்ரீரங்கம் உண்டியலில் இருந்து ரூ.47 லட்சம் காணிக்கையாக பெறப்பட்டுள்ளது

39
Spread the love

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் உண்டியல்கள் திறக்கப்பட்டு இன்று எண்ணப்பட்டதில், 47 லட்சத்து 62 ஆயிரத்து 487 ரூபாய் பணமும், 81 கிராம் தங்கமும், 935 கிராம் வௌ்ளியும், 23 வௌிநாட்டு கரன்சியும் காணிக்கையாக பெறப்பட்டது. உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் இணை ஆணையர் மாரிமுத்து முன்னிலையில் திருவானைக்கோயில் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயில் உதவி ஆணையர் மாரியப்பன், ஸ்ரீரங்கம் கோயில் உதவி ஆணையர் கந்தசாமி, மேலாளர் உமா , உள்துறை கண்காணிப்பாளர் வேல்முருகன் ,திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் ஐயப்ப சேவா சங்கத்தினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

LEAVE A REPLY