ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதேசி.. இன்று முகூர்த்தகால் நடப்பட்டது..

127
Spread the love

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலில்வருகிற 14 .12. 2020 முதல் 04.01.2021 வரை வைகுண்ட ஏகாதசி பெருவிழா நடைபெறுவதை முன்னிட்டு இன்று காலை 10.30 – 11.00 மணிக்கு முகூர்த்தகால் நடும் வைபவம் ஆயிரங்கால் மண்டபம் அருகில் கோயில் இணை ஆணையர் ஜெயராமன் முன்னிலையில் , பக்தர்கள் யாரும் இன்றி நடைபெற்றது.

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவில் வைகுண்ட ஏகாதேசி பெருவிழா 14.12 .2020 அன்று திருநெடுந்தாண்டகமும் , 15.12.2020 முதல் 24.12.2020 வரை பகல் பத்து திருவிழாக்களும் , 24.12.2020 அன்று ஸ்ரீ நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலமும், முக்கியத் திருநாளான பரமபத வாசல் திறப்பு 25.12 .2020 வெள்ளிக்கிழமை காலை 04.45மணி அளவிலும் ,31.12 .2020 ஸ்ரீநம்பெருமாள் கைத்தல சேவையும் ,01.01.2021 அன்று திருமங்கை மன்னன் வேடபரி திருவிழாவும்.03.01.20221அன்று தீர்த்தவாரியும், 04.01 2021 அன்று ஸ்ரீநம்மாழ்வார் மோட்ச்சமும் நடைபெறும் .

LEAVE A REPLY