தமிழக காவல்துறை வரலாற்றில் 2வது எஸ்எஸ்பி நியமனம்..

159
Spread the love

தமிழக காவல்துறை வரலாற்றில் முதல் முறையாக உளவுத்துறைக்கு இரண்டு எஸ்பிக்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆட்சி மாற்றத்திற்கு பிறகு உளவுத்துறைக்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் ஆசிர்வாதம் நியமிக்கப்பட்டார். பின்னர் டிஐஜியாக ஆசியம்மாள் நியமிக்கப்பட்டார். ஆட்சி மாற்றத்திற்கு பிறகு எஸ்எஸ்பி எனப்படும் உளவுத்துறை எஸ்பியாக அரவிந்தன் நியமிக்கப்பட்டார். சுமார் 5 மாதங்களுக்கு பிறகு உளவுத்துறைக்கு கூடுதலாக இன்னொரு எஸ்பியாக சரவணன் நியமிக்கப்பட்டுளளார். இவர் ஏற்கனவே ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவில் எஸ்பியாக இருந்து வந்தவர் என்பது குறிப்பிடதக்கது. தமிழக காவல்துறையில் உளவுத்துறைக்கு 2 எஸ்பிக்கள் நியமிக்கப்படவில்லை என கூறப்படும் நிலையில் எஸ்பி 1க்கான பணிகள், எஸ்பி 2க்கான பணிகள் தனித்தனியாக ஒதுக்கப்படும் என உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.. ஆட்சி மாற்றத்தின் போதே எஸ்எஸ்பியாக சரவணன் நியமிக்கப்படுவார் என கூறப்பட்ட நிலையில் தற்போது அவர் பொறுப்பேற்றுள்ளார்.. 

LEAVE A REPLY