சுவையான சுரைக்காய் குழம்பு….

சுவையான சுரைக்காய் குழம்பு….

131
Spread the love

தேவையானவை: 

  • சிறிய சுரைக்காய் – 1,
  • கீறிய பச்சை மிளகாய்வெங்காயம் – தலா 1,
  • இஞ்சி-பூண்டு விழுதுமிளகாய்த்தூள் – தலா டீஸ்பூன்,
  • புளி – நெல்லிக்காய் அளவு,
  • தேங்காய் துண்டுகள் – 2,
  • சீரகம் – ஒரு டீஸ்பூன்,
  • மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்,
  • தனியாத்தூள் – ஒன்றரை டீஸ்பூன்,
  • எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்,
  • உப்பு – தேவையான அளவு.

செய்முறை:  

தேங்காய்சீரகத்தை அரைத்துக் கொள்ளவும். காய் களைப் பொடியாக நறுக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டுகாய்ந்ததும் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும். பின்னர் கீறிய பச்சை மிளகாய்இஞ்சி-பூண்டு விழுதை சேர்த்துபச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பின்னர் சிறிது எலுமிச்சை அளவு உள்ள புளியைக் கரைத்து அதில் சேர்க்கவும். பின்னர் அதில் மிளகாய்த்தூள்மஞ்சள்தூள்தனியாத்தூள்அரைத்த தேங்காய்-சீரகம் விழுதைச் சேர்த்து கொதிக்கவிட்டு பின்னர் நறுக்கிய சுரைக்காயை போட்டு தேவையான உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு கொதித்து  நன்றாக வெந்ததும் இறக்கவும். சுவையான சுரைக்காய் குழம்பு ரெடி.

LEAVE A REPLY

error: செய்தியை நகல் எடுக்கவேண்டாமே, எங்களை இணைப்பைப்பகிருங்கள். நாங்களும் வளர்கின்றோம், உங்கள் அன்புக்கு நன்றி!