திருச்சி வந்த ஸ்டாலினுக்கு, நேரு தலைமையில் வரவேற்பு…

169
Spread the love

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திருவாரூரில் தேர்தல் பிரச்சாரம் செய்தார்.  அதனைத் தொடர்ந்து இன்று சேலத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார். இதற்காக தஞ்சாவூரிலிருந்து திருச்சி விமான நிலையம் வந்த மு.க.ஸ்டாலினுக்கு,  திமுக முதன்மைச் செயலாளரும், திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதி  வேட்பாளருமான கே.என்.நேரு தலைமையில் திமுகவினர் வரவேற்பு அளித்தனர். இந்த நிகழ்ச்சியில் மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, மாநகர செயலாளர் அன்பழகன், கிழக்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் இனிகோ இருதயராஜ், வழக்கறிஞர் பாஸ்கர் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். அதன் பிறகு மு.க.ஸ்டாலின் தனி விமானம் மூலம் சேலம் புறப்பட்டு சென்றார். 

LEAVE A REPLY