பாஜவிடம் ஜாக்கிரதை .. எம்பிகளுக்கு ஸ்டாலின் அட்வைஸ்

275
Spread the love

சென்னை அறிவாலயத்தில் ஸ்டாலின் தலைமையில் எம்.பி.க்கள் கூட்டம் நேற்று நடந்தது. அப்போது பாஜ விஷயத்தில் ஜாக்கிரதையாக இருக்குமாறு எம்பிகளை கேட்டுக்கொண்டுள்ளார். அப்போது ஸ்டாலின் பேசியதாவது: லோக்சபா தேர்தல் வெற்றியின் வாயிலாக நாட்டின் மூன்றாவது பெரிய கட்சியாக தி.மு.க. உருவெடுத்துள்ளது. தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டங்களை உடனடியாக நடத்த வேண்டும்.தி.மு.க.வுக்கு ஓட்டுப் போடாத மக்கள் வசிக்கும் பகுதி என எந்தபகுதியையும் புறக்கணிக்கக் கூடாது; அங்குள்ள மக்களுக்கும் நன்றி தெரிவிக்க வேண்டும். சட்டசபை தொகுதி வாரியாக எம்.பி. குறை தீர்க்கும் அலுவலகம் திறக்க வேண்டும். அங்கு பொது மக்கள் தரும் புகார் மனுக்கள் மீது உடனுக்குடன் தீர்வு காண வேண்டும். தொகுதி மக்களின் குறை தீர்க்கும் பணிகள் குறித்தும் நிறைவேற்றிய வளர்ச்சி பணிகள் குறித்தும் மாதம்தோறும் என்னிடம் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். பாஜ விஷயத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். மத்திய அரசிடம் தனிப்பட்ட முறையில் எந்த ஆதாயத்தையும் பெறும் வகையில் எம்.பி.க்களின் செயல்பாடுகள் இருக்கக் கூடாது. அத்தகைய தகவல் எம்.பி.க்களுக்கு மட்டுமல்ல; கட்சிக்கும் களங்கத்தை ஏற்படுத்தி விடும். எந்தவொரு சிறிய குற்றச்சாட்டிற்கும் இடம் கொடுத்து விடக் கூடாது.இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

LEAVE A REPLY