முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ”தல” தோனிக்கு பாராட்டு விழா…..

222
Spread the love

ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அசத்தல் வெற்றி பெற்று கோப்பையை வென்றுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் உற்சாகம் கரைபுரண்டோடியது. இந்த வெற்றி தோனி குறித்த விமர்சனங்கள் அனைத்தையும் தவிடு பொடி ஆகச் செய்துள்ளது. இதனை கொண்டாடும் வகையில் சிஎஸ்கே நிர்வாகத்தினர் விழா நடத்த முடிவு செய்துள்ளனர். இது குறித்து சிஎஸ்கே உரிமையாளர் சீனிவாசன்…..சிஎஸ்கே இல்லாமல் தோனி கிடையாது. தோனி இல்லாமல் சிஎஸ்கே கிடையாது. பிசிசிஐ விதிமுறைகளை பின்பற்றி வீரர்களை தக்க வைப்போம். சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றியை கொண்டாட திட்டமிட்டுள்ளோம். தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் வெற்றி விழா நடைபெறும். வெற்றிக்கோப்பையை முதல்வரிடம் வழங்கி தோனி வாழ்த்து பெறுவார் என்று அவர் தொிவித்துள்ளார். 

LEAVE A REPLY