கல்லணையில் ஆய்வு.. அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் போட்ட உத்தரவு..

857
Spread the love

தஞ்சை மாவட்டம் கல்லணையில் நடைபெற்ற சீரமைப்பு பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். இது குறித்து அவர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து புனரமைப்பு பணிகள் குறித்து அங்கு வைக்கப்பட்டிருந்த புகைப்பட கண்காட்சியினை முதல்வர் பார்வையிட்டார். அதன் பின்னர் அங்கு ஆய்வு கூட்டம் முதல்வர் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆய்வு கூட்டத்தில் டெல்டா மாவட்டங்களில் 647 இடங்களில் 64 கோடி ரூபாய் செலவில் நடைபெற்ற

 

குடிமராமத்து பணிகள் குறித்து  அமைச்சர்கள் துரை முருகன், நேரு, மகேஷ் மற்றும் பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் சந்தீப் சக்‌சேனா மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசித்தார். இம்முறை கடை மடை பகுதி வரை தண்ணீர் செல்வதற்கு உரிய வகையில் பணிகள் நடைபெற வேண்டும். கடைமடைப்பகுதிகளுக்கு தண்ணீர் சேரவில்லை என யாரும் குறைசொல்ல முடியாத வகையில் பணிகள் இருக்க வேண்டும் எனவும் முதல்வர் ஸ்டாலின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.. 

LEAVE A REPLY