லெட்டர பத்தி அவர் சொல்லாட்டி நான் சொல்லுவேன்.. ஸ்டாலின் அதிரடி

858
Spread the love

காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றப்படுவதாக கடந்த 9ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.  இந்த நிலையில் கடந்த 10ம் தேதி அமைச்சர் ஜெயக்குமார் டெல்லி சென்று மத்திய சுற்றுச் சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரை சந்தித்துப் பேசினார். அப்போது, காவிரி டெல்டாவை வேளாண் மண்டலமாக மாற்றுவது தொடர்பாக முதல்வர் எழுதிய கடிதத்தை மத்திய அமைச்சரிடம் வழங்கியதாக நிருபர்களிடம் ஜெயக்குமார் தெரிவித்தார். இந்த நிலையில் சட்டமன்ற வளாகத்தில் இன்று நிருபர்களிடம் ஸ்டாலின் பேசுகையில்  “முதல்வரின் அறிவிப்பு வெளியான நேரத்தில் அமைச்சர் ஜெயக்குமார் டெல்லி சென்று, முதல்வர் அளித்ததாக ஒரு கடிதத்தை வழங்கினார். அந்தக் கடிதத்தில் என்ன இருக்கிறது என்று சொல்லப்படவில்லை. இன்று மாலைக்குள் அந்த கடிதத்தில் என்ன இருக்கிறது என்று சொல்லியாக வேண்டும். அப்படி சொல்லவில்லை என்றால் விரைவில் அந்த கடிதத்தை நானே வெளியிடுவேன்” என அதிமுகவிற்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். 

LEAVE A REPLY