பாஜவுக்கு எதிராக வலிமையான கூட்டணி.. ராகுலிடம் ஸ்டாலின் வேண்டுகோள்..

82
Spread the love

மதசார்பற்ற கூட்டணி கட்சிகளின் பொதுக்கூட்டம் சேலத்தில் இன்று நடைபெற்றது. இந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் ஒரே மேடையில் காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி,  திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர். பிரச்சார கூட்டத்தில் ஸ்டாலின் பேசும்போது….. மத்திய அரசு கலாச்சார தாக்குதல், ரசாயன தாக்குதலை தமிழகம் மீது நடத்தி வருகிறது. மாநில உரிமைகள் பறிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்துக்கு வர வேண்டிய எந்த நிதியும் வரவில்லை.  உரிமைகளை மீட்டெடுக்க திமுக இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டும்.  இந்தியாவை காக்க வேண்டிய கடமை ராகுல்காந்தியிடம் உள்ளது. தமிழகத்தில் மதசார்பற்ற கூட்டணி அமைந்ததால்தான் எம்பி தேர்தலில் தமிழகத்தில் பாஜக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை. தற்போது நடைபெற உள்ள தேர்தலிலும் பாஜக எந்த ஒரு தொகுதியிலும் வெற்றி பெற போவதில்லை.  தமிழகத்தில் அமைந்துள்ள கூட்டணி போல இந்திய அளவில் அமைய வேண்டும். ராகுல் காந்தி பொறுப்பேற்று இந்திய அளவில் ஒரு கூட்டணி அமைய வழிவகுக்க வேண்டும் என்று அவர் பேசினார். 

LEAVE A REPLY