அம்மா உணவகம் தாக்குதல்… திமுகவினர் நீக்கம்…

162
Spread the love

சென்னை மதுரவாயல் பகுதியில் அம்மா உணவகத்தின் பெயர் பலகையை திமுகவினர் அகற்றி உள்ளனர். இதன் காரணமாக அந்த இரண்டு பேரும் திமுகவில் இருந்து நீக்கப்பட்டு உள்ளனர். மேலும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆணைப்படி பெயர் பலகை மீண்டும் அதே இடத்தில் பொறுத்தப்பட்டுள்ளதாக மா.சுப்பிரமணியன் தொிவித்துள்ளார். அத்துமீறிய செயலில் ஈடுபட்ட திமுகவினர் 2 பேர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவும் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்….. வெற்றிக்காணிக்கை என்ற பெயரில் தங்களது உடலுக்கு ஊறுவிளைவித்துக் கொள்ள வேண்டாம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். திமுக பெண் தொண்டர் ஒருவர் நாக்கை அறுத்து கோயில் உண்டியலில் போட்டு நேர்த்திக்கடன் நிறைவேற்றியுள்ளார். திமுக தொண்டர்கள் துயரத்தை உண்டாக்கும் நிகழ்வுகளில் ஈடுபட வேண்டாம். நற்பணி ஆற்றுவதே காணிக்கை என்றும் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

LEAVE A REPLY