ஆர் எஸ் பாரதியை ஸ்டாலின் கண்டித்திருக்க வேண்டும்.. எடப்பாடி

165

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சேலத்தில் நிருபர்களிடம் கூறியதாவது.. ஆர்.எஸ்.பாரதி கைதுக்கும் அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை. சட்டத்தின் அடிப்படையிலே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பட்டியல் இனத்தவரை விமர்சித்ததன் புகாரின் பேரிலே ஆர்.எஸ். பாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

இ-டெண்டரில் முறைகேடு என ஆர்.எஸ். பாரதி தெரிவித்ததில் துளிகூட உண்மை இல்லை. அரசியல் ஆதாயம் தேடுவதற்காக ஸ்டாலின் அரசின் மீது புகார் தெரிவிக்கிறார். ஆர்.எஸ். பாரதி பேசிய போதே மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருக்க வேண்டும்.

LEAVE A REPLY