ஸ்டேன் சாமி அஸ்திக்கு ஏராளமானோர் திருச்சியில் அஞ்சலி….

108
Spread the love

ஜார்கண்ட் மாநிலத்தில் பழங்குடியின மக்களுக்காக குரல் கொடுத்த மனித உரிமைகள் செயற்பாட்டாளர் ஸ்டேன் சாமி சரியில்லாமல் கடந்த மாதம் காலமானார். இந்நிலையில் அவரது அஸ்தி நேற்று திருச்சி தூய வளனார் கல்லூரி வளாகத்தில் உள்ள லூர்து அன்னை ஆலயத்திற்கு கொண்டு வரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை கூட்டுத் திருப்பலி, தொடர்ந்து மலர் அஞ்சலி நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டு ஸ்டேன் சாமி அஸ்திக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் மாலை திருச்சி மேலப்புதூர் புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் நினைவேந்தல் பொதுக் கூட்டம் நடைபெற்றது.

LEAVE A REPLY