காஞ்சிபுரத்தில் நிலத்துக்கு அடியில் சிலை கண்டுபிடிப்பு…..

135
காஞ்சிபுரம் அடுத்த தாமல் அருகே, பெரும்பாக்கம் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான வயல்வெளியில் கால்வாய் அமைப்பதற்கு நிலத்தை அகலப்படுத்தும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது, திடீரென நிலத்துக்குள் கல் சிலை தென்பட்டதை அடுத்து பணி நிறுத்தப்பட்டது.குழி தோண்டி பார்த்தபோது நிலத்துக்கு அடியில் பழங்கால தேவி சிலை மூன்று அடி உயரத்தில் இருந்ததும் கண்டு பிடிக்கப்பட்டது. இதனை அறிந்த பொதுமக்கள் சிலைகளை எடுக்க மறுப்பு தெரிவித்தனர். ஸ்வாமி சிலைகள் குறித்து, தொல்லியல் துறை மூலம் ஆய்வு செய்யப்பட்டு பின் கலெக்டர் மூலமாக ஊர் பொதுமக்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுப்பதாக, தாசில்தார் தெரிவித்தார். இதையடுத்து ஸ்வாமி சிலையை எடுத்துச் செல்ல பொதுமக்கள் அனுமதி அளித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

LEAVE A REPLY