ஆஸி.,யிலிருந்து ரூ.30 கோடி மதிப்பு நடராஜர் சிலை மீட்பு!

199

திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி குலசேகர உடையார் கோயிலில் இருந்த பஞ்சலோக நடராஜர் சிலை 37 ஆண்டுகளுக்கு முன் கொள்ளை போனது. இதன் மதிப்பு ரூ.30 கோடியாகும். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தியும் எந்த முன்னேற்றமும் இல்லை. இதனால் வழக்கு கைவிடப்பட்ட நிலையில் இருந்தது. இந்நிலையில் பொன்.மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு போலீசார் நடத்திய விசாரணையில் அந்த சிலை ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு அருங்காட்சியகத்தில் இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து சிலையை மீட்க ஆஸ்திரேலிய தூதரகம் மூலம் நடவடிக்கை எடுத்தனர். இதையடுத்து இன்று ஆஸ்திரேலியாவிலிருந்து சிலை டெல்லிக்கு கொண்டு வரப்பட்டது. தற்போது அந்த சிலை ஆஸ்திரேலிய தூதரகத்தில் உள்ளது. நாளை ரயில் மூலம் சிலை சென்னைக்கு கொண்டு வரப்படவுள்ளது. சிலை மீட்கப்பட்டதால் கல்லிடைகுறிச்சி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

LEAVE A REPLY