சட்டமன்ற குழு தலைவராக ஸ்டாலின் ஒருமனதாக தேர்வு

100
Spread the love

திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உதயசூரியன் சின்னத்தில் நின்று வெற்றி பெற்ற தோழமை கட்சி எம்எல்ஏக்களும் அழைக்கப்பட்டிருந்தனர். இதன் காரணமாக 133 எம்எல்ஏக்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் சட்டமன்ற குழு தலைவராக மு.க.ஸ்டாலின் ஒரு மனதாக தேர்தெடுக்கப்பட்டார். திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஒப்புதல் கடிதங்களுடன் நாளை மு.க.ஸ்டாலின், தமிழக கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க ஒப்புதல் கோருவார். இதனை தொடர்ந்து வரும் 7ம் தேதி பதவி ஏற்பு விழா நடைபெற உள்ளது. கொரோனா பரவல் காரணமாக மிக எளிமையாக பதவி ஏற்பு விழா நடைபெற உள்ளது. 

LEAVE A REPLY